முழு நாடும் சோகத்தில்! அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை தருணம்
Sajith Premadasa
Government Of Sri Lanka
Sri Lankan political crisis
Sri Lanka Fuel Crisis
World Economic Crisis
By Vanan
மக்களின் நம்பிக்கைகள் துண்டுதுண்டாக உடைப்பு
நாட்டினதும் பிரஜைகளினதும் அனைத்து நம்பிக்கைகளையும் துண்டுதுண்டாக உடைத்து முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பிலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்.
மக்களின் உரிமைக்கு விழுந்த பலத்த அடி
இது ஜனநாயகம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமைக்கு எதிரான அடியாகவே பார்க்கப்படும்.
தவகல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது வேறு எந்த வழிகளினாலோ மக்களின் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது எதிர்க்கட்சித் தலைவர் குறித்த அறிக்கையில் கூறியுள்ளார்.

