கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு 24 மணி நேரம் மட்டும் செல்லுபடியாகும் சிறப்பு ஸ்டிக்கர் அறிமுகம்
வெளி இடங்களில் இருந்து கொழும்புக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் 24 மணி நேரம் மட்டும் செல்லுபடியாகும் சிறப்பு ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்புக்குள் நுழையும் போது வரும் முதல் சோதனைச் சாவடிகளில் சிறப்பு பரிசோதனை நடத்தப்பட்டு அனைத்து வாகனங்களுக்கும் ஸ்டிக்கர் ஒன்று ஸ்ரீலங்கா பொலிஸாரால் ஒட்டப்படும்.
ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் கொழும்பு மாவட்டத்திற்குள் வேறு சோதனைச்சாவடிகளில் மீண்டும் சோதனை செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட உள்ளது.
இந்த ஸ்டிக்கர் 24 மணிநேர காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவையை வழங்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட சோதனை மூலம் ஊழியர்கள் தாமதமாக வருவதாக எங்களுக்கு முறைப்பாடுகள் வந்தன.
இதை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
மேலும், செல்லுபடியாகும் அடையாளம் மற்றும் ஆவணங்களை வழங்குவதன் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகளுக்கு உதவுமாறு அத்தியாவசிய தொழிலாளர்களை கேட்டுக்கொண்டார்.