வட மாகாண பாதுகாப்பு தொடர்பில் கிளிநொச்சியில் விசேட பேச்சு
வட மாகாணத்தின் சட்ட ஒழுங்கு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்பட்டதாக மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் ஜெகத் பலிகக்கார (Jagath Pallikkara) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற வட மாகாண காவல்துறை அதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள், காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
வட மாகாணத்தில் சட்ட ஒழுங்கை நடமுறைப்படுத்துவதுடன் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கான அதிகாரங்களை அதிகாரிகள் உரிய வகையில் பிரயோகிக்க வேண்டும் என காவல் மா அதிபரினால் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.