வவுனியாவில் களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப்படை
அண்மைய நாட்களாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதனாலேற்படும் குற்றச்செயல்கள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதனை கட்டுப்படுத்துமாறு மதகுருமார் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
யாழில் மீட்கப்பட்ட கஞ்சா

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இந்த நடவடிக்கையை கட்டுப்படுத்த விசேட அதிரப்படை களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாதகலில் அவர்களால் பெருமளவு கஞ்சா மீட்கப்பட்டிருந்தது.
வவுனியாவில் விசேட அதிரடிப்படை

அதேபோன்று வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன் விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் தொடர்பில் தகவல் கிடைத்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0718592378, 0112580518 அறிவிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.