விசேட போக்குவரத்து சேவை: வெளியான அறிவிப்பு
நாட்டில் பொசன் போயா காலத்தில் அதிக பேருந்து சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் (CTB) தலைவர் லலித அல்விஸ் (Lalith Alwis) தெரிவித்துள்ளார்.
மஹவ (Mahawa) தொடக்கம் அனுராதபுரம் (Anuradhapura) வரையிலான தொடருந்து பாதை புதுப்பிக்கப்படுவதால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை (Mihintale), அநுராதபுரம் ஆகிய நகரங்களுக்கு வரும் மக்களின் வசதிக்காக உரிய பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாக தலைவர் தெரிவித்தார்.
முகாமையாளர்களுக்கு பணிப்புரை
இதேவேளை வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மேலதிகமாக கம்பஹா Gampaha, கொழும்பு (Colombo) உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து விசேட பேருந்து சேவையும் இடம்பெற உள்ளதாக தலைவர் தெரிவித்தார்.
சாதாரண போக்குவரத்து சேவைக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் பயன்படுத்தப்படும் எனவும் தேவைக்கு ஏற்ப அதிக பேருந்துகளை பயன்படுத்துமாறு டிப்போ முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |