சொந்த இடங்களுக்குச் சென்ற மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை
புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்ற மக்களுக்காக இன்று (15) மற்றும் நாளை (16) விசேட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப அந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஷஷி வெல்கம (Shashi Welgama) தெரிவித்தார்.
சிறப்பு தொடருந்துகள்
இதேவேளை, தற்போதுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 25% இன்றைய தினம் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijerathne) சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தொடருந்தில் வரும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு தொடருந்துகள் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே (N.J. Indipolage) குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |