நாட்டில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட போக்குவரத்துச் சேவைகள்
தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக வீடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் இன்றும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, பொது மக்கள் தொடருந்துகள் மற்றும் பேருந்துகள் மூலம் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், மக்கள் அசௌகரியங்கள் இன்றி கொழும்புக்கு வருகை தருவதற்கு போதுமான அளவு தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.
விசேட போக்குவரத்துச் சேவைகள்
இதேவேளை, பயணிகள் எவ்வித இடையூறும் இன்றி கொழும்புக்கு திரும்புவதற்காக விசேட பேருந்துச் சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் மேலதிக பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் பேருந்துச் சேவையை இன்று(17) முதல் 75 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |