கைவிடப்பட்டது பணிப்புறக்கணிப்பு போராட்டம் (முதலாம் இணைப்பு)
நாளை காலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (24) காலை 8 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்திருந்தனர்.
இதேவேளை, ஜனவரி மாதத்திற்கான வழமையான சம்பளப் பட்டியலின் ஊடாக DAT கொடுப்பனவைப் பெறாத வைத்தியர்களுக்கு விசேட வவுச்சர் மூலம் உரிய கொடுப்பனவை செலுத்துமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து நாளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார துறை முடங்கும் அபாயம் :விசேட வைத்திய நிபுணர்களும் வேலை நிறுத்தத்தில் குதிப்பு
மருத்துவர்களுக்கான இடர்கால கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு எதிராக, நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை காலை 8.00 மணி முதல் அகில இலங்கை ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
விசேட வைத்திய நிபுணர்களும்
மருத்துவர்களுக்கான DAT கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கான DAT கொடுப்பனவை 35 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், நிதி அமைச்சகத்தின் சில அதிகாரிகள் அதை இடைநிறுத்த முயற்சிப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |