உலக செஸ் செம்பியன்ஷிப் பட்டத்தை தன்வசப்படுத்திய தமிழ் இளைஞர்
சிங்கப்பூரில் (Singapore) நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் தொடரின் வெற்றியாளர் பட்டத்தை இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் (Kukesh) தன்வசப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடப்பு செம்பியனான சீனாவின் (China) டிங் லிரென்குடன் இடம்பெற்ற இறுதிப்போட்டியிலேயே அவர் குறித்த வெற்றியை பெற்றுள்ளார்.
13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று இருந்த நிலையில், இதனால் இருவரும் 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்
இந்தநிலையில், இன்று 14 ஆவது மற்றும் கடைசி சுற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.
இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
இதில் 58 ஆவது காய் நகர்த்தலுக்குப் பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் இதனால் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |