முதுகெலும்பு இல்லாதவர்கள் -யாரை சாடுகிறார் சுமந்திரன்
M A Sumanthiran
Tamil National Alliance
By Sumithiran
முதுகெலும்பு இல்லாதவர்கள்
ஒரு கூட்டு தீர்மானம் எடுத்தால் அதன் பொறுப்பு தீர்மானம் எடுத்த அத்தனை பேரையும் சாரும். அந்த பொறுப்பை எடுக்க மறுப்பவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுமந்திரனின் பதிவு
அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த நிலையிலும் இது தொடர்பாக கூட்டமைப்பிற்குள் உட்பூசல்கள் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் நிலையிலும் சுமந்திரனின் இந்த பதிவு முக்கியம் பெறுகிறது.
