விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த போடப்பட்ட திட்டம் - வெளிவரும் பின்னணி
விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த தனது தந்தையின் காலத்தில் பல்வேறு உத்திகள் செயற்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு காசோலைகள் எழுதப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது அமைச்சரின் கருத்து பதில் அளித்த சஜித் பிரேமதாச,
விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் கூட்டாளிகளுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. முசோலினிக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும் பணம் வழங்கப்பட்டது. வேறு எதனாலும் அல்ல. எதிரி அணியில் பிளவுகளை உருவாக்க.
எனது தந்தையின் காலத்தில் பிரபாகரனிடம் இருந்து விலகியிருந்த மாத்தயாவையும் யோகியையும் வலுப்படுத்த - விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த பல்வேறு உத்திகளை செயற்படுத்தினார்கள்” என்றார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
