யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு விழா ஆரம்பம் (படங்கள்)
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு விழா இன்று(24) காலை 09 மணியளவில் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளரும், ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடகக்குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் கலந்து சிறப்பிக்கின்றார்.

சிறப்பு அதிதிகளாக தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் மற்றும் மேலதிக பணிப்பாளரான எஸ். முகுந்தன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் உதைபந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகளுடன், தொழில்நுட்பவியல் கல்லூரியின் உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து மாலை 03.00 மணிக்கு வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படும்.
இந்நிகழ்வில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு தொழிநுட்பவியல் கல்லூரி மாணவர் ஒன்றியத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.







