காணாமற்போன இளம் குடும்பஸ்தர் தென்னந்தோப்பிலிருந்து சடலமாக மீட்பு
பெலியத்த காவல் பிரிவின் நகுலுகமுவ, தெத்துவாவெல பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் இன்று (30) காலை ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெலியத்த, புவக்தண்டாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான விதாரண பண்டிதகே விராஜ் பிரசன்ன என்பவர் சுமார் 11 நாட்களாக காணாமல் போயிருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்
தேங்காய் அறுவடை செய்யச் சென்ற தொழிலாளி அழுகிய உடலைக் கண்டு தென்னந்தோட்ட உரிமையாளர்கள் மூலம் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

வீட்டிலிருந்து வெளியேறியவர் திரும்பி வரவில்லை
கடந்த (19) ஆம் திகதி இரவு 7 மணியளவில் இறந்தவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியேறினார், பின்னர் அவரது மனைவி அவரைக் காணவில்லை என்று பெலியத்த காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அவர் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் நகுலுகமுவா தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        