தனியார் அரபு பெண்கள் பாடசாலையொன்றில் தீ விபத்து
Fire
Sri Lankan Schools
By Shalini Balachandran
வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்று தீப்பரவலக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (03) இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவர்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரவலான தீ
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்த காவல்துறையினர் மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் பரவலான தீயினால் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்