கே.எல்.ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்ட லக்னோ அணி உரிமையாளர்: வைரலாகும் காணொளி
லக்னோ அணிக்கு(Lucknow Super Giants) எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி(Sunrisers Hyderabad) வெற்றிப்பெற்றதை தொடர்ந்து லக்னோ அணியின் உரிமையாளர் அணித்தலைவரான கே.எல் ராகுலுடன் கடுமையாக நடந்துக்கொண்ட காணொளி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ஐபிஎல் தொடரானது இறுதிகட்டத்தை நோக்கி முன்னெறும் நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களது வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நேற்றைய தினம், ஐதராபாத்தில்(Hyderabad) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்களுக்குமிடையிலான போட்டி இடம்பெற்றது.
கடுமையாக நடந்துகொண்ட உரிமையாளர்
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைய 20 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றது. அதனை தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டி முடிந்ததன் பின்னர் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா(Sanjiv Goenka), அணித்தலைவர் கே.எல்.ராகுலிடம்(K.L.Rahul) கடுமையாக நடந்துக்கொண்டார்.
வைரலாகும் காணொளி
பார்ப்பதற்கு அவர் கோபமாக திட்டும் விதமாக இருந்த இந்த காணொளி பதிவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
காணொளி பார்த்தவர்கள், உடைமாற்றும் அறையில் (Dressing room)நடக்க வேண்டிய விவாதங்கள் பொதுவெளியில் நடக்கிறது என்றும் விளையாட்டில் வெற்றித் தோல்விகள் சகஐம் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதேவேளை,லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை அணி(Mumbai Indians) பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலையில் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
LSG Owner is not happy with KL Rahul. pic.twitter.com/M8VwKcp5OX
— CricketGully (@thecricketgully) May 9, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |