இலங்கையில் கொரோனாவின் புதிய விகாரம்? களத்தில் இறங்கியது ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்
corona
sri lanka
people
By Shalini
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோவிட் வைரஸின் புதிய விகாரங்கள் குறித்த புதிய சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதன்படி, புதிய ஆய்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்று டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
சாதாரண பி.சி.ஆர் சோதனைகள் மூலம் இலங்கை முழுவதும் பதிவான கொரோனா வைரஸின் மரபணு வகைகளைக் கண்டறிய இயலாமை காரணமாக இந்த புதிய சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த சோதனைகளில் அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வரும் புதிய வைரஸ் இலங்கையில் பரவுவதைக் கண்டறிய முடியும்.
இந்த சோதனைகள் மிகக் குறுகிய காலத்தில் முடிவுகளைத் தரும் என்றும் டாக்டர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்