ஊழல் மிகுந்த நாடுகள் இலங்கை எத்தனையாவது இடம் தெரியுமா...!
2024-ஆம் ஆண்டுக்கான மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளின் கண்ணோட்ட குறியீடு தரவரிசைப் பட்டியலில் இலங்கை(sri lanka) 121 ஆவது இடத்தில் உள்ளது.
மொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் ஊழல் குறைந்த நாடாக தொடா்ந்து 6-ஆவது ஆண்டாக டென்மாா்க் முதலிடம் பிடித்துள்ளது.
சா்வதேச வெளிப்படைத்தன்மை என்ற தன்னாா்வ அமைப்பு இந்தக் குறியீட்டை ஒவ்வோா் ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
முதலிடத்தை தக்க வைத்த நாடு
அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழல் உட்பட 13 தரவுகளின்படி பூஜ்ஜியம் முதல் 100 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது.
இதில், ஊழல் மிகுந்த நாடு என்றால் பூஜ்ஜியம் மதிப்பெண்ணும், ஊழல் அற்ற நாடு என்றால் 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
தெற்காசிய நாடுகளுக்கு கிடைத்த இடம்
ஊழல் குறைந்த முதல் 10 நாடுகளில் டென்மார்க் 90 மதிப்பெண்களுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது, அதைத் தொடர்ந்து பின்லாந்து(88) மற்றும் சிங்கப்பூர்(88) அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
ஊழல் மிகுந்த முதல் 10 நாடுகள் தெற்கு சூடான் (8)சோமாலியா (9) வெனிசூலா (10) சிரியா (12) யேமன் (13) லிபியா (13) ஈகுவடோரியல் கினியா(13) நிகரகுவா (14) சூடான்(15)
தெற்காசியாவைப் பொறுத்தவரைஇந்தியா(india) 96 ஆவது இடத்திலும் பாகிஸ்தான்(pakistan) 135 ஆவது இடத்திலும், வங்கதேசம்(bangladesh) 149 ஆவது இடத்திலும் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)