தொடரும் சீரற்ற வானிலை: நாட்டின் பல்வேறு பாகங்களில் தடைப்பட்டுள்ள மின்சாரம்
நாட்டின் பல்வேறு பாகங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் (Sri Lanka) தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சபை கூறியுள்ளது.
மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் மின்சாரத்தை மீண்டும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பருவமழைக்கு முந்தைய காலநிலை காரணமாக, மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியிருந்தது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், அதளை மீள விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
