ஈரான் அதிபரின் மரணம்! இரங்கல் வெளியிட்டுள்ள உலக தலைவர்கள்
ஈரான் (Iran) அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) மரணத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.
நேற்றிரவு (19) இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட குழுவினர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகம் இன்று (20) உறுதிப்படுத்தியது.
இதையடுத்து, இப்ராஹிம் ரைசியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்தது. இந்த நிலையில், இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட குழுவினரின் மரணத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.
சீனா
ஈரான் அதிபரின் இழப்பு மிக துயரமானது என சீன (China) அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping) தெரிவித்துள்ளார். இப்ராஹிம் ரைசியின் மரணம் அந்த நாட்டு மக்களுக்கு பாரிய இழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சீன நாட்டு மக்கள் நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்துள்ளதாகவும் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்
உலங்கு வானூர்தி விபத்தில் இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட முக்கிய தரப்பினர் உயிரிழந்தமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) தலைவர் சார்ள்ஸ் மைக்கல் (Charles Michel) இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த தரப்பினரின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
The EU expresses its sincere condolences for the death of President Raisi and Foreign Minister Abdollahian, as well as other members of their delegation and crew in a helicopter accident. Our thoughts go to the families.
— Charles Michel (@CharlesMichel) May 20, 2024
ஈராக்
ஈரான் அதிபர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் விபத்தில் உயிரிழந்த இந்த தருணத்தில், நாட்டு மக்களுடனும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருடனும் ஈராக் (Iraq) இருப்பதாக அந்த நாட்டு பிரதமர் ஷியா அல்-சூடானி (Shia al-Sudani) தெரிவித்துள்ளார்.
تعزية
— محمد شياع السوداني (@mohamedshia) May 20, 2024
…
ببالغ الحزن، وعظيم الأسى، تلقينا نبأ وفاة رئيس الجمهورية الإسلامية الإيرانية السيد إبراهيم رئيسي، ووزير الخارجية السيد حسين أمير عبد اللهيان، ورفاقهما، خلال حادث تحطم الطائرة المؤسف في شمال إيران.
وإننا إذ نتقدم بخالص تعازينا ومواساتنا إلى المرشد الأعلى للجمهورية…
ஹமாஸ்
ஈரான் மக்கள் எதிர்நோக்கியுள்ள இந்த பாரிய இழப்பு தொடர்பில் ஹமாஸ் அமைப்பு இரங்கல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான போரில் பலஸ்தீனுக்கு ஆதரவளித்தமைக்காக இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட குழுவினருக்கு தொடர்ந்தும் நன்றியுடன் இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மலேசியா
கடந்த நவம்பர் மாதம் மலேசியாவுக்கு (Malaysia) விஜயம் செய்திருந்த ஈரான் அதிபர், எதிர்பாராத விதத்தில் உயிரிழந்தமை தொடர்பில் தான் மிகுந்த கவலையடைவதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) தெரிவித்துள்ளார்.
I am deeply saddened by the tragic deaths of President Ebrahim Raisi, Foreign Minister Hossein Amir-Abdollahian and several other officials of the Islamic Republic of Iran. My heartfelt condolences go out to the people of Iran during this profoundly difficult time. May Allah… pic.twitter.com/DGx6MXLBt3
— Anwar Ibrahim (@anwaribrahim) May 20, 2024
நீதி, சமாதானம் மற்றும் இஸ்லாம் சமூகத்தினருக்காக இப்ராஹிம் ரைசி தொடர்ந்தும் செயல்பட்டடை ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
மலேசியா மற்றும் ஈரானுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தததாகவும், எதிர்காலத்தில் இந்த உறவு தொடருமெனவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான்
ஈரான் அதிபரின் மரணத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் (Pakistan) துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானிய தேசம் இந்த சோகத்தை மிக வலிமையுடன் சமாளிக்கும் என அந்த நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) தெரிவித்துள்ளார்.
Pakistan had the pleasure of hosting President Raisi and Foreign Minister Hossein Amir Abdollahian on a historic visit, less than a month ago. They were good friends of Pakistan. Pakistan will observe a day of mourning and the flag will fly at half mast as a mark of respect for… https://t.co/fVP26Mtiyr
— Shehbaz Sharif (@CMShehbaz) May 20, 2024
கத்தார்
ஈரான் அதிபர் மற்றும் அவருடன் உயிரிழந்த தரப்பினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |