ரஷ்யாவுக்கு இலங்கையர்களை நாடு கடத்திய நபர் கைது! வெளியான தகவல்
ரஷ்யாவுக்கு (Russia) இலங்கையர்களை சட்டவிரோதமாக அனுப்பிய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆள் கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக தெஹிவளை (Dehiwala) பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 120 இலங்கையர்களை சுற்றுலா விசாவின் மூலம் நாடு கடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கைது நடவடிக்கை
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையர்களை ரஷ்யாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பிய குற்றச்சாட்டில் ஏற்கனவே இராணுவ அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ரஷ்யாவுக்காக போர் புரிய சென்ற இலங்கையர்களுள் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |