இலங்கை விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி முன்னேற்றம்
இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், 2024 ஜனவரி தொடக்கம் நவம்பர் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2025 ஜனவரி தொடக்கம் நவம்பர் காலப்பகுதியில் விமானப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
2025 ஜனவரி தொடக்கம் நவம்பர் காலப்பகுதியில் சர்வதேச விமானப் பயணிகளின் கையாளுதல் 9.23 மில்லியனாகப் பதிவாகியுள்ளதுடன் இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 15.20 வீத வளர்ச்சியாகும்.
அதேபோல், 2025 ஜனவரி தொடக்கம் நவம்பர் காலப்பகுதியில் 58,454 சர்வதேச விமானக் கையாளுதல்கள் இடம்பெற்றுள்ளதுடன் இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.64 வீத அதிகரிப்பாகும்.

அத்தோடு, 2025 ஜனவரி தொடக்கம் நவம்பர் காலப்பகுதியில் சுமார் 2.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் வருகை தந்துள்ளனர்.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16.73 வீத வளர்ச்சியாகும்.
புதிய அரசாங்கம் பதவியேற்றதுடன் விமானப் போக்குவரத்துத் துறைக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர்களின் வழிகாட்டலின் கீழ் முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பால் இந்த மைல்கற்களை எட்ட முடிந்தமை இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையின் மறுமலர்ச்சிக்கான அறிகுறி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |