வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு எச்சரிக்கை தகவல்..!
இலங்கைக்கு விமான நிலையத்தினூடாக வருகை தரும் அனைத்து பயணிகளுக்கும் சுங்கத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
தடைசெய்யப்பட்ட மற்றும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் அல்லது வர்த்தக பொருட்களை அல்லது உடன் வராத பயணிகளின் பொருட்களை விமான நிலையத்தினூடாக எடுத்து வருவதை தவிர்க்குமாறு சுங்கத் திணைக்கள பணிப்பாளர் பி.பி.எஸ்.சி.நோனிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த நாட்களில் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயணிகள் கொண்டுவருவது அதிகரித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருட்களில் தங்கம், சிகரெட், மருந்து அலங்கார செடிகள் போன்ற பொருட்களும், நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி பிரச்சினைகளால் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பொருட்களும் இதில் அடங்கும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
