வறிய மக்களுக்காக குரல் கொடுக்கும் அநுரகுமார யுகதனவி உடன்படிக்கையை எதிர்ப்பது ஏன்? ஜோன்ஸ்டன் கேள்வி
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தப்பட்ட உடன்படிக்கைக்கு ஆதரவாக தான் குரல் கொடுப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வறிய மக்களுக்காக பேசும் அனுரகுமார திஸாநாயக்க இந்த உடன்படிக்கைக்கு எதிராக ஏன் பேசுகிறார் என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த உடன்படிக்கை சம்பந்தமாக அமைச்சரவை எடுத்த தீர்மானங்கள் காரணமாக நாட்டில் மின் கட்டணங்கள் குறையும். ஒரு அலகு மின்சாரத்தை பெற செலவாகும் பணம், 50 சத வீதமாக குறையும் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டணம் குறையும் தீர்மானத்தை ஏன் சில அரசியல்வாதிகள் எதிர்க்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்