ரணில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அச்சநிலை
இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்களுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும் அரசாங்கம் பயந்துள்ளது. அந்தப் பயத்தை யாராலும் இனி இல்லாதுசெய்ய முடியாதென முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார் .
கடந்த காலங்களில் மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள், அதன்போதான கைதுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையின் வரலாற்றில் கைவிடாது போராட்டங்களை முன்னெடுத்து அவற்றில் வெற்றி பெறுவதை காட்டிக்கொடுத்தது மாணவர் ஒன்றியங்கள்.
ஒடுக்குமுறை
இவ்வாறான மாணவர் ஒன்றியங்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் ஒடுக்குமுறைகளை உபயோகிக்கிறது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உட்பட இருவரை கைது செய்து ஒரு மாத காலம் ஆகிறது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க உட்பட அவரது அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயப்படுகிறார்.
சுதந்திரத்தை குறித்து கருத்து தெரிவிக்கும் நாமல் ராஜபக்ச அந்தச் சுதந்திரம் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
போராட்டம் வெடிக்கும்
கடந்த காலங்களில் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிய வேளை அரசாங்கம் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்து அவர்களை அடக்கினார்கள். எனினும் அதனை இன்று மீண்டும் செய்ய முடியாது.
சூறாவளிக்கு முதல் நிலவும் அமைதியே தற்போது இலங்கையில் நிலவுகிறது. எதிர்காலத்தில் இதனைவிட பெரிய மக்கள் போராட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படும்” என்றார்.
