குறைக்கப்படும் இராணுவத்தின் எண்ணிக்கை - வெளியான தந்திரோபாய திட்டம்
சிறிலங்கா இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை அடுத்து வரும் வாரங்களில் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் கூறுகையில், ''தற்போது 200,783 ஆக உள்ள சிறிலங்கா இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும்.
சமநிலையான பாதுகாப்பு
2030 ஆம் ஆண்டுக்குள் படையினரின் எண்ணிக்கையை 100,000ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இராணுவ பலம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு பரிமாணங்களுக்கு இணையாக வரவிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், 2030ஆம் ஆண்டிற்குள் தொழிநுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே மூலோபாய வரைபடத்தின் ஒட்டுமொத்த நோக்கமாகும்.''என குறிப்பிட்டுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 13 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)