குருந்தூர் மலை விவகாரம் - அம்பலமான மற்றுமொரு முயற்சி
Sri Lanka Army
Sri Lankan Tamils
Mullaitivu
By Pakirathan
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
இதேவேளை, இராணுவத்தினரின் பங்களிப்புடனேயே குறித்த விகாரையின் பணிகள் இடம்பெற்றது என்பதை அங்கு புதிதாக பதிக்கப்பட்ட கல்வெட்டு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பௌத்தமயமாக்கல்
அதேசமயத்தில், குறித்த குருந்தூர் மலை பிரதேசத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு இங்கு வருகை தருபவர்களின் வாகனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதன்மூலம், மீண்டும் குருந்தூர் மலையில் திட்டமிட்டு மேற்கெள்ளப்பட்ட பௌத்தமயமாக்கல் முயற்சி அம்பலமாகியுள்ளது.





