யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிப்பு - கடற்றொழில் அமைச்சரின் அறிவிப்பு
Sri Lanka Army
Sri Lankan Tamils
Jaffna
Ramalingam Chandrasekar
By Thulsi
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி
குறித்த அறிக்கையில், தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும்.
அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 33 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி