உலகளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்
உலகில் சுற்றுலாப் பயணத்திற்கு ஏதுவான சிறந்த 50 தீவுகளில் ஒன்றாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
பிக் 7 (Big 7 ) இனால் வெளியிடப்பட்ட இந்த ஆண்டுக்கான (2023) சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள ஏதுவான 50 நாடுகளின் பட்டியலிலேயே இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் பஹாமாஸ் தீவும் 13 ஆவது இடத்தினை இலங்கைத் தீவும் பிடித்துள்ளது.
சுற்றுலாத்துறையில் எழுச்சி
உலகை உலுக்கிய கொரோனா தாக்கம் தொடங்கி, பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பாரிய சிக்கல்களை சந்திக்கொண்டிருந்த ஆண்டுகளில் இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டிருந்தது.
இந்த ஆண்டு மீண்டும் புதுப்பொலிவுடன் இலங்கை தனது சுற்றுலாத்துறையில் எழுச்சி கண்டுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.
"நட்புறவான மக்கள், சுவையான உணவு, முடிவற்ற கடற்கரைகள்,தேயிலைத் தோட்டங்கள், யானைகள் நிறைந்த வனவிலங்குப் பூங்காக்கள் ஆகியவற்றைக்கொண்ட சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொண்ட இடமாக இலங்கை திகழ்கிறது ”என்று பிக் 7 இலங்கை பற்றி விளக்கமளித்துள்ளது.
புதிய விடுதிகள் மற்றும் உணவகங்களின் திறப்பு, புதிய சுற்றுலா முயற்சிகள் என இந்த ஆண்டு உலக நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட உத்திகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிக் 7 குறிப்பிட்டுள்ளது.