இலங்கை -இந்திய கடவுளை சீனாவிற்கு விற்க முயற்சி
Sri Lanka
China
India
By Jaso
இலங்கை இந்திய தெய்வத்தையே சீனாவுக்கு விற்பனை செய்ய அரசு முயற்சிக்கின்றது என சுற்றுப்புறச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு தொடர்பான அமைப்பின் தேசிய அமைப்பாளர் ரவிந்து காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதை நிறுத்த இந்தியாவின் உதவியை தமது அமைப்பு நாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அழிவிற்கே வித்திடும்

இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள குரங்கு இனம் விஷேடமான வகையை சேர்ந்தது இந்த இனத்தை சீனாவுக்கு அனுப்புவது இந்த குரங்கினத்தின் அழிவிற்கே வித்திடும்.
மேலும் குரங்கை இந்துக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இலங்கை இந்திய தெய்வத்தையே சீனாவுக்கு விற்பனை செய்ய அரசு முயற்சிக்கின்றது என குறிப்பிட்ட அவர் இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதை நிறுத்த இந்தியாவின் உதவியை தமது அமைப்பு நாடவுள்ளாதாக கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்