பலாங்கொடை மண்சரிவு - வீடுகள் தாழிறங்கும் அபாயம்
Sri Lanka
Sabaragamuwa Province
Landslide In Sri Lanka
By Dharu
பலாங்கொடையில் ஏற்பட்ட மண்சரிவினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பலாங்கொடை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மிரிஸ்வத்த – கங்கபார பகுதியில் நேற்று(17) ஏற்பட்ட மண்சரிவினால் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும், பலாங்கொடையில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழையினால் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிப்பு
இவ் அனர்த்தத்தினால் சிறுவர்கள் உள்ளிட்ட 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மண்சரிவால் பாதிக்கபட்டவர்கள் குறித்த வீடுகளிலேயே தங்கியுள்ளதாகவும் தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் வீடுகள் தாழிறங்கும் அபாயம் ஏற்படலாம் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்