வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Bankrupt
Money
By Kalaimathy
இலங்கையில் சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளன.
அதன்படி இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதன் காரணமாக தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என வங்கிகள் அறிவித்துள்ளன.
குறிப்பாக இணையவழி மூலமாக வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வோருக்கு இந்த எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டுள்ளது.
இணைய வழி பரிவர்த்தனை தொடர்பான எச்சரிக்கை
- குறுஞ்செய்தி ஊடான வங்கி நடவடிக்கைகளை செயற்படுத்திக் கொள்ளல்.
- இணையவழி பரிவர்த்தனை வசதிகளை உபயோகிப்போர் Two-Factor Authentication முறையை செயல்படுத்தல்.
- அடிக்கடி கடவுச்சொல்லை மாற்றுதல்.
- இணையவழி வங்கி முறைமை பாவனையின் போது பாதுகாப்பான இணையத்தளத்தை பாவித்தல்.
- VPN ஊடாக இணையவழி வங்கி முறைமையை பயன்படுத்துவதை தவிர்த்தல்.
- அங்கீகரிக்கப்படாத இணையத்தளங்கள் ஊடாக இணையவழி வங்கி முறைமையை உபயோகிப்பதை தவிர்த்தல்.
- தனிப்பட்ட Username, கடவுச்சொல் மற்றும் OTP Number போன்றவற்றை யாருடனும் பகிராதிருத்தல்.
- தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்தால், உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு அறிவித்தல்.
கடனட்டை பரிவர்த்தனை தொடர்பான அறிவுறுத்தல்
- கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் PIN எண்களை யாரிடமும் யாருடனும் பகிராதிருத்தல்.
- ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறுஞ்செய்தி பெற்றுக்கொள்ளும் நடைமுறையை செயற்படுத்தல்.
- பணம் மீறப்பெறல் அல்லது அட்டை பாவனையின் பொது தெரியாத நபர்களிடம் உதவிகள் பெறுவதை தவிர்த்தல்.
- வர்த்தக தளங்களில் அட்டைகள் தொடர்பான விபரங்கள் பதிவு செய்வதை தவிர்த்தல்.
- VPN ஊடாக இணையவழி மூலமாக குறித்த அட்டைகள் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதை தவிர்த்தல்.
