மக்களின் தோலை உரித்து சப்பாத்தும் செய்யத் தயங்காத அரசியல்வாதிகள்!
இன்றைய ஆட்சியாளார்கள் தங்களுடைய நாடாளுமன்ற கதிரையை கூட வியாபார பொருட்களாக பாவிக்கின்றார்கள் என ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பதுக்கல் மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக செங்கலடி கோட்டா கோ கம வாளாகத்தில் இருந்து ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்கு, முச்சக்கர வண்டிகள் சங்கம், விவசாயிகள், மீனவர்கள், கால்நாடையாளர்களும் இணைந்து அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
இதன் போதே ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஏறாவூர்பற்று பிரதேசத்தில் அதிகளாவான மக்களின் ஜீபானேபாயமாக விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு தொழிலை மேற்கொண்டு வருகின்றார்கள். இங்குள்ள விவசாயிகள் தங்களுடைய பயிர்செய்கைக்கு எரிபொருள் வாங்க வந்தால் மட்டுப்படுத்தப்பட்ட ரூபாய் 300க்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கின்றது.
அதுவும் ஐந்து ஆறு மணி நேரம் வரிசையில் இருந்து பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் இரவு வேளைகளில் மண் மாபியாக்களுக்கு வரையறை இன்றி எரிபொருள் இடைதரகர்கள் மூலம் வழங்கப்படுகின்றது.
இவற்றினை முற்று முழுதாக இடைநிறுத்தி விவாசயத்தையும், மீனவர்களையும் ஏறாவூர்பற்றில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியினர்களுக்கும் முன்னுரிமைபடுத்தி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைய ஆட்சியாளார்கள் தங்களுடைய நாடாளுமன்ற கதிரையை கூட வியாபார பொருட்களாக பாவிக்கின்றார்கள். அன்று ஒருவர் பதவி விலகியதால் 7ம் அறிவு பசில் ராஜபக்சவின் நாடாளுமன்றம் வருகையால் நடந்தது என்னவென்றால் நல்லா இருந்த நாட்டை நாசமாக்கி அடமானம் வைத்தது தான் மிச்சம்.
இப்போது இலங்கையின் முதலாவது செல்வந்தரான தம்மிக்க பெரேராவை நாடாளுமன்றம் கொண்டுவர முயற்சி செய்துள்ளார்கள். அவர் யார்? சூதாட்டம், கசினோ மூலம் தனது வியாபாரத்தை விருத்தி செய்தவர் அவரை கொண்டு வந்து அபிவிருத்தி செய்ய போகிறார்களாம்.
நான் நினைக்கின்றேன் இவ்வாறானவர்களை அதிகார நாக்காலிக்கு கொண்டு வந்தால் இங்குள்ள மக்களின் தோலை உரித்து சாப்பாத்தும் செய்து அபிவிருத்தி செய்ய தயங்கமாட்டார்கள்.
இரண்டு நேரம் மாத்திரம் சாப்பிட தாயாராக இருங்கள் பொருட்கள் தட்டுபாடாக உள்ளது என்று செய்தி அறிக்கை விடுவதற்கு ஒரு பிரதமர், இவ்வாறான கேலிக்கையான விடயங்கள் இலங்கை நாட்டில் மட்டுமே நிகழும்.
நிலவளத்தை விட நீர் வளம் கொண்ட நாடாக நாம் இருந்தும் என்ன பயன், பெறுமதி வாய்ந்த தொழிநுட்ப முறை உள்ளதா இல்லை. ஆனால் எங்களைவிட சிறிய நாடான மாலைதீவு இன்று மாசி உற்பத்தி சுற்றுலாதுறை ஊக்குவிப்பு என தன்னுடைய பொருளாதார இருப்பைத் தக்க வைத்து கொண்டு செயற்படுகின்றார்கள்.
ஆனால் இங்கு நல்லா இருந்த விவசாயத்தை அழித்துள்ளார்கள். இன்று நாடளாவியல் ரீதியில் பசளை இன்மையால் பாரியாளவில் வயல் செய்கை பதிப்படைந்த நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டமும், அம்பாறை மாவட்டமுமே இன்றையளவில் முன்னிலையில் உள்ளது.
இன்னும் சில வாரங்களில் அறுவடைக்காலம் ஆரம்பமாக உள்ளது. அந்த காலகட்டத்தில் டீசல் இல்லாது போனால் விவாசாயிகளும் அவர்களது குடும்பமும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைதான் உருவாகும்.
எரிபொருள் நிலையை போக்க சரியான ஒரு பொறிமுறையை கொண்டு வந்து சரி செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

