மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்!
மட்டக்களப்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் காவல்துறை உத்தியோகத்தரின் வீட்டில் இருந்து இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார்.
பிறைந்துரைச்சேனை முஹம்மதியா வீதியில் வசித்து வந்த, வாழைச்சேனை காவல் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மது முஸ்தபா செய்யது ஹமீட் வயது 60 எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு அவரது அறையில் உறங்கியுள்ளார்.
மீண்டும் காலையில், அவர் எழும்பாத நிலையில் அவரது பிள்ளைகள் மதியம் எழுப்பிய போது எந்தவித சத்தமும்வராதமையால் கதவை உடைத்துப் பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
தகவலையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அருகில் உள்ள அவசர சேவை பிரிவின் வாகன உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் இவரது மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






