இந்தியாவின் 29வது மாநிலமாக இலங்கையை மாற்ற அநுர தயார் : குமார் குணரட்ணம்
இந்தியாவின் 29 ஆவது மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் (FSP) பொதுச் செயலாளர் குமார் குணரட்ணம் (Kumar Gunaratnam) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கியது இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கு அல்ல எனவும் அவர் மேலும் சுடட்டிக்காட்டினார்.
நேற்று (01) கிருலப்பனை லலித் அத்துலத்முதலி மைதானத்தில் நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மே தின அணிவகுப்பு
மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னணி சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ (Duminda Nagamuwa), சர்வதேச தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இந்த முறை மே தின அணிவகுப்பை நடத்தவில்லை என தெரிவித்தார்.
இதேவேளை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) மே தினக் கூட்டம் நேற்று மாலை 3.30க்கு கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
