தனியார் பேருந்து சேவைகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்து சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தினை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பேருந்துகளுக்கு போதியளவு டீசல் இன்மையால் இன்றைய தினம் தனியார் பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதியளிக்கப்பட்ட போதும் போதியளவில் டீசல் இல்லை
அதேவேளை இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
இருப்பினும் துரதிஷ்டவசமாக மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருக்கே இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் கிடைக்கப் பெற்றது.
சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை
இதன் காரணமாக உரிய வகையில் பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று முதல் போதியளவு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளால் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை பாதிக்கப்படாது என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
