அமைச்சர்களின் சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய முடிவு!
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka Cabinet
Government Of Sri Lanka
By Kalaimathy
சிறிலங்காவின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் சம்பளம் இன்றி பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
ரணிலின் யோசனை
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவே இவ்வாறான யோசனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எடுக்கப்பட்டது முடிவு
அதற்கமைய நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி