புத்தளம் கால்வாய் பகுதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
Puttalam
Sri Lanka Police Investigation
By Laksi
புத்தளம் ஆனமடுவ நகரில் கால்வாய் ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சடலமானது இன்று (21) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்ற ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சகோதரருடைய மகளுடைய திருமண வீட்டிற்கு
குறித்த நபர் சகோதரருடைய மகளுடைய திருமண வீட்டிற்கு வந்தபோதே இவ்வாறு மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஆனமடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி