இந்தியாவை வீழ்த்தியதால் கடும் மகிழ்ச்சியில் இலங்கை அணித்தலைவர்
27 வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் தொடரில் இந்திய அணியை வீழ்த்தியதால் கடும் மகிழ்ச்சியில் உள்ளதாக இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க(charith asalanka) தெரிவித்துள்ளார்.
தொடரை கைப்பற்றிய பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
நான் இப்போது மகிழ்ச்சியான அணித்தலைவராக இருக்கிறேன். தொடர் முழுவதும் எங்கள் அணி அனைத்து விஷயங்களையும் சரியாக செய்தது.
இந்திய அணி வலுவான துடுப்பாட்ட வரிசை
இந்திய அணி ஒரு வலுவான துடுப்பாட்ட வரிசையை கொண்டது என்பதை நாங்கள் அறிவோம். சுழற்பந்து வீச்சு எங்களது பலம். எனவே, நாங்கள் எங்கள் பலத்தை ஆதரிக்க விரும்பினோம். அதை நாங்கள் சிறப்பாக செய்தோம்.
பயிற்சியாளர் மிகவும் சுறுசுறுப்பு
அணியினர் இப்போது நல்ல மனநிலையில் உள்ளனர். எங்கள் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா (sanath jayasuriya)மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அணியின் சூழலை வீரர்கள் நன்றாக அனுபவித்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ஓட்டங்களால் இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |