தியத்தலாவை பந்தயக் கார் விபத்து: உயிரிழந்தோருக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு
தியத்தலாவை(Diyatalawa) பந்தயக் கார் போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு"(Ministry of Sports) இழப்பீடுகளை வழங்கியுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவும் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
தியத்தலாவையில் கடந்த ஏப்ரல் 21 நடைபெற்ற (Fox Hill Supercross 2024) என்ற கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இழப்பீடு
"ஃபாக்ஸ் ஹில் பந்தய டிராக், ராணுவத்திற்குச் சொந்தமானது. இந்தக் கார் பந்தயம் இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
விபத்து தொடர்பில் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |