சீனாவுடனான உறவின் 65 ஆவது வருடம் - மகிந்த தலைமையில் கொண்டாட்டம்
srilanka
china
relation
mahinda rajapaksha
By Sumithiran
இலங்கை-சீன இராஜதந்திர உறவுகளின் 65வது நினைவு நிகழ்வும், சீன இலங்கை இறப்பர் அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவு விழாவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை (17) பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெறவுள்ளது.
ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் என பெருமளவானோர் பங்கேற்கவுள்ளதாக சீன-இலங்கை இராஜதந்திர உறவுகள் கொண்டாட்டக் குழுவின் தலைவர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நினைவுச் சின்னமும் வெளியிடப்படவுள்ளது.
இந்த நினைவேந்தலில் சீன-இலங்கை உறவுகளை நினைவுபடுத்தும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறும்.
சீன - இலங்கை இராஜதந்திர உறவுகள் கொண்டாட்டக் குழுவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
