கோட்டாபயவிற்கு வெளிநாடுகளில் புகலிடம் வழங்கும் நோக்கமே அலி சப்ரியின் நியமனம் - சுமந்திரன் விசனம்!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு வெளிநாடுகளில் புகலிடத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே, அவரது நெருங்கிய நண்பரான அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜபக்சக்களின் மறைமுக ஆட்சியே ரணில் விக்ரமசிங்கவினால் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படுவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மே 9 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதலை கண்டித்த ரணில் விக்கரமசிங்க, தற்போது காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவவத்தை மேற்கொண்டுள்ளதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் சிறிலங்காவின் புதிய அதிபராக பதவியேற்று ஒருசில மணிநேரத்திற்குள் நிறைவேற்றதிகாரம் ரணிலை மாற்றிவிட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
