எமது பரிந்துரைகளுக்கு செவி சாய்க்காத மஹிந்தவே நாட்டின் இந்த நிலைமைக்கு பொறுப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை அரச தலைவர் வேட்பாளராக கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்த்த முதல் நபர் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரச தலைவர் வேட்பாளராக கட்சியில் மூத்தவர்களை பரிசீலிக்க பரிந்துரைத்த போதும், மஹிந்த ராஜபக்ஷ அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கோட்டாபய ராஜபக்ஷ அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தவறான முடிவை எடுத்தார் என்றும் அதுவே இன்று முழு நாடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமைக்கு முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு கூற வேண்டும் எனவும் குமார வெல்கம தெரிவித்தார்.
