ஜப்பானில் கிரிக்கெட்டை வளர்க்கப்போகும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம்
Sri Lanka Cricket
Japan Sri Lanka Relationship
Japan
By Sumithiran
ஜப்பானில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் ஜப்பான் கிரிக்கெட் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜப்பானுக்கு செல்லவுள்ள இலங்கை வீரர்கள்
இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை வீரர்கள், கிரிக்கெட் அணிகள், பயிற்சியாளர்கள், மைதான ஊழியர்கள் ஆகியோர் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்படுவதுடன், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மேலதிக பயிற்சிக்காக இலங்கை வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஜப்பானில் நடைபெறும் ரி 20 போட்டிகளுக்கு இலங்கை அணிகள் அனுப்பப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜப்பானிய வீரர்கள் எல்பிஎல் அணிகளுடன் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி