பேஸ்புக் நிறுவனத்திற்கு கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் உள்ள சமூக வலைத்தள கணக்குகள் குறித்த அனைத்து தகவல்களையும் வழங்குமாறு முகபுத்தக நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவானது, கொழும்பு மேலதிக நீதவான் டி. என். எல். இளங்கசிங்கவினால் நேற்று(20) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணை
மேலும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
முகப்புத்தகத்தில் பௌத்தம் மற்றும் புத்தரை அவமதிக்கும் வகையில் புஸ் புத்தா, புஸ் புத்தாவைப் பின்பற்றுபவர்கள் என்ற பெயர்களில் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பணிப்புரை
இந்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் அறிவிக்குமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிரடி சுற்றிவளைப்புகள்: இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |