இலங்கையில் இன்றும் 1,491 தொற்றாளர்கள் பதிவாகினர்!!
sri-lanka-covid
shavedra silva
By Vanan
இலங்கையில் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, இன்றைய தினத்தில் (29) மாத்திரம் 1,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் 106,444 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 362 பேர் இன்று (29) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,445 ஆக அதிகரித்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்