கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 21 கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,429 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 06 பெண்களும் 15 ஆண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவேளை இன்று இதுவரை, 527 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 529,608 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.