இலங்கையில் மேலும் 12 கொவிட் மரணங்கள் பதிவு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 12 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (16) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (17) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,484 ஆக அதிகரித்துள்ளது.