கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 18 கொவிட் மரணங்கள் நேற்று(09) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,573 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 09 ஆண்களும், 09 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுறுதியான மேலும் 567 பேர் இன்று, இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 571,239 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 12,466 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஏனையோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்