கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
patient
By Vanan
கொரோனா தொற்று உறுதியான மேலும் 3,110 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 388,806 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும்18,769 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 342,159 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் தினமும் இரு சுற்றுகளில் கொவிட் நிலவரம் வெளிவரும். இதன்படி தற்போது 3110 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி