கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
patient
By Vanan
கொரோனா தொற்று உறுதியான மேலும் 548 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 532,766 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 25,927 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இன்று வெளியான அறிக்கையின் படி, நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,525 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.